
இந்தோனேசியாவின் பண்டா கடற்பகுதியில் இன்று அதிகாலை 6.6 அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் இலங்கைக்கு சுனாமி ஆபத்து இல்லை என தேசிய சுனாமி முன் எச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது.
இலங்கை நேரப்படி அதிகாலை 2.41 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களத்தின் ஆரம்பத் தகவலின்படி, இது சுமார் 20 கிலோமீற்றர் ஆழத்தில் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்து உடனடித் தகவல்கள் வெளியாகவில்லை.
தேசிய மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் கலந்தாலோசித்த பின்னர் சுனாமி தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டதாகவும், இந்த நிலநடுக்கத்தால் இலங்கையின் கரையோரப் பகுதிகளுக்கு ஆபத்து இல்லை எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
👉 மேலும் செய்திகளுக்கு Jaffna Visiting பக்கத்தைப் பின்தொடருங்கள்