அனுராதபுரம் மாவட்டத்தின் தம்புத்தேகம பகுதியில் வசிக்கும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பம் ஒன்றுக்காக, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது சொந்த நிதியில் வீடு கட்டிக் கொடுத்து வருகிறார்.

கட்டுமானப் பணிகளைப் பார்வையிட அங்கு சென்ற அவர், அங்கு உணவருந்தியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

செயற்பாட்டு அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும், தன்னால் இயன்ற அளவு மக்களுக்குச் சேவை செய்வது தனது வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே தொடர்வதாக அவர் அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.

சந்திரிகாவின் ஆட்சிக்காலப் பின்னணி

சந்திரிகா ஜனாதிபதியாக இருந்த காலத்தில், வடக்கு மற்றும் கிழக்கில் தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகள் எழுந்தன. யாழ்ப்பாண மாணவி கிருசாந்தி குமாரசுவாமியின் படுகொலை அந்தக் காலத்திலேயே இடம்பெற்றது. இராணுவத்தினரால் கொல்லப்பட்டவர்கள் செம்மணியில் புதைக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.