பிரான்ஸில் யாழ்ப்பாணம், சாவகச்சேரியைப் பூர்வீகமாகக் கொண்ட 51 வயதுடைய மகேந்திரதேவி என்ற பெண் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆறு நாட்களுக்குப் பின்னர் மீட்கப்பட்ட சடலம்
கடந்த நவம்பர் 9ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த மகேந்திரதேவி, ஆறு நாட்களுக்குப் பின்னர் பிரான்ஸின் La Courneuve பகுதியில் உள்ள வாகனத் திருத்துமிடம் ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தின் பின்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
முன்னாள் கணவர் உள்ளிட்ட மூவர் கைது
இந்தச் சம்பவம் தொடர்பில் வாகனத் திருத்துமிட உரிமையாளர், அவரது மனைவி உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 51 வயதுடைய வாகனத் திருத்துமிட உரிமையாளர், உயிரிழந்த பெண்ணின் முன்னாள் கணவர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விசாரணையின்போது பெண்ணின் உயிரிழப்புக்குத் தானே காரணம் என அவர் ஒப்புக்கொண்டதாக Bobigny அரசுத் தரப்பு வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து அவர் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த மகேந்திரதேவியின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கல்கள்.