கிளிநொச்சி, சாந்தபுரம் பகுதியில் 26 வயதுடைய யுவதி ஒருவர் அத்துமீறலுக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 17 வயது சிறுவன் ஒருவரும், 18 மற்றும் 20 வயதுடைய இருவரும் அடங்குகின்றனர். அவர்கள் மூவரும் நவம்பர் 10ஆம் திகதி கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையில் சட்ட மருத்துவ அதிகாரி முன்னிலையில் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

மருத்துவப் பரிசோதனையில் மூவரும் கஞ்சா மற்றும் ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருட்களைப் பயன்படுத்தியிருந்தமை தெரியவந்ததாகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.