2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரை நவம்பர் 12ஆம் திகதி பிற்பகல் 1.30 மணிக்கு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பைச் சமர்ப்பித்து உரையாற்றவுள்ளார்.
இதற்கு முன்னதாக, வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் அடங்கிய இறுதி ஆவணத்தை ஜனாதிபதி நவம்பர் 11ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் ஆய்வு செய்தார்.
இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் 13 முதல் 20 வரை ஏழு நாட்கள் நடைபெறவுள்ளது. அதற்கான வாக்கெடுப்பு நவம்பர் 20 மாலை 6 மணிக்கு இடம்பெறும்.
அதைத் தொடர்ந்து, நவம்பர் 21 முதல் டிசம்பர் 14 வரை குழுநிலை விவாதத்துக்கு 19 நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் நான்கு சனிக்கிழமைகளும் அடங்கும். மூன்றாம் வாசிப்பு மீதான இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் 14 மாலை 6 மணிக்கு நடைபெறும் என நாடாளுமன்றம் அறிவித்துள்ளது.
கருத்துகள் (0)
முதல் கருத்தை இடுங்கள்.