வவுனியா, குருமன்காடு பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த மாநகரசபை ஊழியர் ஒருவர் தாக்குதலில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குருமன்காட்டில் உள்ள வியாபார நிலையமொன்றுக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த மரக்கறிகளையும் பழங்களையும் மாநகரசபை ஊழியர்கள் அகற்றிக் கொண்டிருந்தனர். அப்போது, அந்த வியாபார நிலையத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் ஊழியரைத் தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் குறித்த பெண்ணைக் கைது செய்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.